மகாராஷ்டிரா மக்கள் மீது நடத்திய ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’: உத்தவ் தாக்கரே ஆவேசம்

மும்பை, 

தேவேந்திர பட்னாவிஸ் முதல் மந்திரியானது மகாராஷ்டிரா மாநிலத்தின் மீதும் இங்குள்ள மக்களின் மீதும் நடத்திய 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே குறிப்பிட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநில அரசியலில் திடீர் திருப்பமாக சில தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் பாஜக ஆட்சியமைத்தது. தேவேந்திர பட்னாவிஸ் அம்மாநிலத்தின் முதல்வராக மீண்டும் இன்று பதவியேற்றார்.
இந்நிலையில், அங்கு கூட்டணி ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோர் இன்று மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் தொடர்பாக பேட்டியளித்த உத்தவ் தாக்கரே, 'தற்போது இங்கு நடந்துள்ளது அரசியலமைப்பு சட்டம் மற்றும் மகாராஷ்டிரா மக்கள் அளித்த தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும்.
இதற்கு முன்னர் வாக்குப்பதிவு இயந்திரங்களில் விளையாட்டு நடந்தது. இப்போது இந்த விளையாட்டை தொடங்கி இருக்கிறார்கள். இனி தேர்தல்கள் எல்லாம் அவசியமே இல்லை என்று நான் கருதுகிறேன்.
வஞ்சிக்கப்பட்டு, முதுகில் குத்த முயன்றபோது மாமன்னர் சத்ரபதி சிவாஜி என்ன செய்தார்? என்பது எல்லோருக்கும் தெரியும். தேவேந்திர பட்னாவிஸ் முதல் மந்திரியாக பதவி ஏற்றது மகாராஷ்டிரா மாநிலத்தின் மீதும் இங்குள்ள மக்களின் மீதும் நடத்திய 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்'. இதற்கு மக்கள் தகுந்த முறையில் பழி தீர்ப்பார்கள்' என்று தெரிவித்தார்.

Popular posts
வேப்பூர் அருகே நகர் ஊராட்சியில் கிருமிநாசினி தெளிப்பு மாவட்ட தணிக்கை அலுவலர் ஆய்வு
Image
எல்லை பாதுகாப்பு படையில் சப்-இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் போன்ற பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 317 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:-
விழுப்புரம் மாவட்டம் அருகே மடப்பட்டு என்ற இடத்தில் சமூக ஆர்வலர் பரிக்கல் குலாம்நபி,ஆசாத் தலைமையில் விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் உணவு மற்றும் குடிநீர் வழங்கினார்