பழனி
பழனியில் திண்டுக்கல் இலக்கியக்களம் சார்பில் இரண்டாம்ஆண்டு புத்தகத்திருவிழா தொடங்கியது. விழாவை பழனி சார்ஆட்சியர் உமா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் திண்டுக்கல் இலக்கியக்களம் சார்பில் இரண்டாம் ஆண்டு புத்தகத்திருவிழா தொடங்கியது.வரும் 28ம்தேதி செவ்வாய் கிழமை வரை அக்சயா பள்ளி கலையரங்கில் தொடர்ந்து ஐந்துநாள் நடைபெறும் புத்தகத் திருவிழாவை பழனி சார் ஆட்சியர் உமா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார். இந்த கண்காட்சியில் இருபதுக்கும் மேற்பட்ட அரங்கங்கள் அமைக்கப்பட்டு, முப்பதுக்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் பங்கேற்று தங்களது புத்தக வெளியீடுகளை காட்சிப்படுத்தியுள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலக்கியக்களம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. புத்தகத் திருவிழா தொடக்கவிழாவில் இலக்கியக்கள தலைவர் குருவம்மாள், கந்தவிலாஸ் உரிமையாளர் பாஸ்கரன், பழனி டிஎஸ்பி விவேகானந்தன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.