முகத்தில் வரும் பருக்களைத் தடுக்கலாம். வந்தாலும் அவற்றைப் போக்கலாம் ஆனால் மச்சம் போல் வந்து நிற்கும் மருவை போக்க முடியுமா. அதற்கு இயற்கை முறையில் வழிமுறைகள் உண்டா?
நினைத்துக்கொண்டிருப்பது மரு.பார்ப்பதற்கு மச்சம் போன்று இருக்கும் இந்த மருக்கள் அதீத அழகை குறைத்துகாட்டும். பெரும்பாலும் முகம், கழுத்து, அக்குள், முதுகு பகுதி யில் அதிகம் தென்படும். குறிப்பாக கழுத்துக்கு பின்புறம் அதிகமாகவே பார்க்கலாம்.
இதை சீக்கிரம் போக்க முடியாது என்றாலும் இது ஒன்றும் சருமத்தில் தீராத வியாதியாக தங்கிவிடாது. இயற்கை வழியில் சில பராமரிப்பை மேற்கொண்டால் அவற்றின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்தலாம். மேற்கொண்டு வராமலும் தடுக்கலாம். உடனடியாக சரி செய்ய வேண்டுமென்றாலும் அதற்கும் சிகிச்சை உண்டு.
முதலில் மருக்கள் என்ன வகையானவை என்பதை கண்டறியுங்கள். சருமத்தை மீறி மேல் நோக்கி வளரும் மருக்கள் சிறு புள்ளி போல் சருமத்தோடு ஒட்டி இருக்கும். தட்டையாகவும் காணப்படும். இவற்றின் நிறம் சருமத்துக்கு ஏற்றாற் போல் இருக்கும். சருமத்தை ஒட்டி இருப்பதால் இவை பெரிய அளவில் வெளியே தெரியாது. இதே போன்று மற்றொரு வகை மருவானது சருமத்தின் நிறத்தை ஒத்திருக்கும்.
ஆனால் தட்டையாக இல்லாமல் சருமத்திலிருந்து சற்று மேலெழும்பி மேல் நோக்கி வளரும். இவற்றை கூர்ந்து கவனித்தால் வெளியே தெரியும். அடுத்ததாக இருக்கும் மருதான் எல்லோருக்கும் தெரிந்தவாறு கருமை நிறத்தில் மச்சம் போன்று சரும நிறத்திலிருந்து மாறி பெரியதாக இருக்கும்.